இணுவையூர் வ.க.பரமநாதன். டென்மார்க்: வ.க.பரமநாதன், கலை இலக்கியக் கழகம், 254, Boegevaenget, 7330 Brande, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம்).
xx, 55 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.
பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களினால் பட்டைதீட்டி மெருகேற்றப்பட்ட கவிஞர் வ.க.பரமநாதன், 1970களின் பின் பகுதிகளிலிருந்து பல்வேறு கவியரங்குகளில் மேடையேறி வந்துள்ளார். இவரது கவிதைகளில் மொழிப்பற்று, இனப்பற்று, மனிதாபிமானம், சமுதாயம் பற்றிய பரந்த நோக்கு என்பன மிளிர்வதை அவதானிக்கலாம். டென்மார்க்கில் புகலிடம் தேடிய கவிஞரின் காலம் தந்த வலிகள் இவை. அவை அக்கவிஞனுள் உணர்வாகிக் கவிதைகளாகியுள்ளன. தன் தனிமை மனநினைவுகளை ஆட்கொண்டவேளை சுயநிலத்தின் நினைவுகளை ‘நிலம் புகுந்த வலிகள்’ என்றும், தான் அடைக்கலமான நிலத்து அவலங்களை ‘புலம் புகுந்த வலிகள்’ என்றும், தான் சார்ந்த சமூகம் பற்றிய பொது நினைப்புகளை ‘பொதுவில் புகுந்த வலிகள்’ என்றும் மூன்று பகுதிகளாகத் தன் கவிதைகளைப் பகுத்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61392).