எம்.பி.செல்லவேல். மட்டக்களப்பு: சாயி எடியுகேஷனல் பப்ளிக்கேஷன்ஸ், ஸ்ரீமுருக பவனம், நொச்சிமுனை, கல்லடி-உப்போடை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 56 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.
இந்நூலில் ஆசிரியர் எழுதிய குவியல், தாய்மை, பூக்கள், காடுகள், காதல், வானம், மழை, ஓ சுற்றுப்புறச் சூழலே, ஓடிப்போனவர்களே, ஓ புலம்பெயர்ந்தவர்களே, அக்கினிப் பூக்கள், மலைகள், பசி, எயிட்ஸ், கனவு ஆகிய தலைப்புக்களில் அமைந்த பதினைந்து கவிதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30568).