11616 சட்டைப் பைக்குள் சிறகு.

ராஜகவி றாஹில். (இயற்பெயர்: அப்துல் கரீம் றாஹில்). நிந்தவூர் 05: ஆர்.கே.மீடியா வெளியீடு, 318, புதிய நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (மாவனல்லை: பாஸ்ட் கிராபிக்ஸ் பிரின்டர்ஸ்).

74 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×13.5 சமீ.

கவிஞர் றாஹில் நம் கண்களுக்குப் புலப்படாத விசித்திரமானதொரு உலகில் சஞ்சரித்து தனது கவிக்கண்களுக்கு மாத்திரம் தெரியும் அழகுகளையும் வசீகரங்களையும் தனக்குள் ஓவியமாக வரைந்து அழகிய தமிழில் அவற்றைக் கவிதைகளாக எமக்குப் படைத்திருக்கிறார். அப்துல் கரீம் றாஹில், (1962.04.20 – ) திகாமடுல்லயைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், அறிவிப்பாளர், நடிகர் என்று பல்பரிமாணங்களில் எம்மிடையே உலாவருபவர். இவரது தந்தை அப்துல் கரீம்; தாய் ஆஷியத்தும்மா. இவர் நிந்ததாசன் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு சந்தப் பாவேந்தர் விருது, ஆசிரியர்தின விருது, ரத்னதீப பல்துறைக்கான விருது, சாமசிறி கவிவாணன் விருது, பிரசாதினி பிரணாமய விருது என்பவற்றைப் பெற்றுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 249521). 

ஏனைய பதிவுகள்