11618 சாத்தான் வழிந்தோடும் சொற்கள்(கவிதைகள்).

ஏ.கே.முஜாரத். கிண்ணியா: எறும்புகள் பதிப்பகம், 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xii, 36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-53613-2-3.

சாத்தான் வழிந்தோடும் சொற்களில் பேய்களும் பிசாசுகளும் சாத்தான்களுமாய் மனிதர்கள் நிரம்பி வழிகின்றார்கள். உம்மா, வாப்பா, அப்பா, உம்மம்மா, சின்னப்பா, மகன் என உறவுகள் உறவாடுகின்றன. எறும்பு, வண்ணத்துப்பூச்சி, பொட்டுப்பூச்சி, பூரான், மட்டைத்தேள், கறையான் என அஃறிணைகள் உயிரோடித் திரிகின்றன. வெயில், மழை, காற்று, புயலென இயற்கையின் பெருந்தகிப்பும் நிகழ்கின்றன. மொத்தத்தில் அந்நியப்படாத சொற்களால் திளைத்து அறிவும் உணர்வும் சமப்படும் கவிதைகளோடு இத்தொகுதியில் இக்கவிஞர் வெளிப்படுகின்றார். கவிஞர் ஏ.கே.முஜாரத் (1979) கிண்ணியா, பிரதான வீதியைச் சேர்ந்தவர். பிறிமா ஆலையில் பணியாற்றும் இவர் 1998இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். பூக்களால் ஒரு புகைப்படம், றிசானாவும் எதுவும் பேசா தவாத்மி சுவர்களும் ஆகிய கவிதை நூல்களை முன்னர் வெளியிட்டவர்.

ஏனைய பதிவுகள்