தர்மினி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள் என படிமங்களைக் கையாள நேர்ந்த ஈழதேசத்திலிருந்து அகதிச் சுமையோடு புலம்பெயர்ந்தோடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பெருமூச்சையும் வழித்தடங்களையும் கவிதைகளாய் நம்முன் வைக்கிறார் தர்மினி. யாழ்ப்பாண மாவட்டத்தில் அல்லைப்பிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இவர் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வருகிறார். தூமை, எதிர் ஆகிய இணையத் தளங்களின் ஆசிரியர்களுள் ஒருவர். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும்.