11626 சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்: தொகுதி 4 (கவிதைகள்).

சுவாமி  விபுலாநந்தர் (மூலம்), வ.சிவசுப்பிரமணியம், சா.இ.கமலநாதன் (பதிப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு ஏப்ரல் 1999. (மட்டக்களப்பு: சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

x, 165 பக்கம், தகடு, விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

1914 முதல் 1947 வரையிலான பல்வேறு காலப்பகுதிகளில் அடிகளாரினால் எழுதப்பட்ட 32 கவிதைகளும் மூன்று பின்னிணைப்புகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியில் எழுதப்பட்ட 28 பாடல்களும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட 4 பாடல்களும் இவற்றில் அடங்குகின்றன. கணேச தோத்திர பஞ்சகம், மாணிக்கப் பிள்ளையார் இரட்டைமணி மாலை, சுப்பிரமணிய சுவாமி இரட்டைமணி மாலை, குன்றெறிந்த குமரவேளைப் பாடிய இரட்டைமணி மாலை, ஏநேய காவியம், ஞானபாஸ்கரோதய சங்க முதலாம் ஆண்டு நிறைவின்போது உவந்தளித்த இசைத்தமிழ்-தத்தம் நிலையில் தாம் பெரியவரே, குருதேவர் வாக்கியம், பூஞ்சோலை காவலன், ஈசனுவக்கும் மலர், தேவி வணக்கம், விவேகானந்த பஞ்சகம், மகாலக்ஷ்மி ஸ்தோத்திரம், குரு சரண ஸ்தோத்திரம், கோயில், மலர்மாலை, தமிழ்நாட்டு நவமணிகள், ஸ்ரீராமகிருஷ்ணதேவரின் திவ்விய சரிதம் (பதிகம்), இமாசல யாத்திரை, தில்லிமாநகர்த்த திருவமர் மார்பன் திருக்கோயிற் காட்சி, நீரர மகளிர் இன்னிசைப் பாடல், அர்ச்சனை மலர், கங்கையில் எழுதியிட்ட ஓலை, பூதங்களைத் தொழுது பூதநாதனை வழிபடல், உலக வாழ்க்கையிலிருப்போர் பிரபத்தியினால் நற்கதியடையும் உபாயம், பேரையூர் அம்பாள் குளம் பொய்யாத விநாயகர் திருவடி பரவிய தேவபாணி, யாழ்நூல் நிறைவுபெற்றது பொருளாகத் திருக்கொள்ளம் பூதூர் அழகிய நாச்சியார் சேவடி பரவிய முன்னிலைப் பரவல், நாவலர் மெய்க்கீர்த்தி மாலை, வங்கத்துதித்த செங்கதிர்வேந்தரின் உபகுப்தர்  The Ideal of Brahmanhood, A Song Offering, The Sacred Hymn of Awakening, In Praise of the divine Name ஆகிய கவிதைகள் இந்நூலில் தேடிச் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18530).

ஏனைய பதிவுகள்