11644 நெஞ்சினிலே (கவிதைகள்).

ஏ.எம்.கஸ்புள்ளா. கிண்ணியா 2: செய்ப் பதிப்பகம், கட்டையாறு வீதி, சின்னக்கிண்ணியா 02, 1வது பதிப்பு, ஏப்ரல் 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-4840-00-3.

கட்டையாற்றை வசிப்பிடமாகவும் றஹ{மானியா நகரை பிறப்பிடமாகவும் கொண்டுள்ள அப்துல் மனாபு கஸ்புள்ளா, இளமைக் காலத்திலேயே ‘அண்ணல்’ என்னும் இலக்கிய ஏட்டின் ஆசிரியராக இருந்து இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். இவர் எழுதி ஈழத்து ஊடகங்களில் அவ்வப்போது வெளிவந்த கவிதைகளுள் தேர்ந்த 62 கவிதைகளை இத்தொகுப்பில் தந்துள்ளார். கவிதைகள் இலகு தமிழில் அழகு தருகின்றன. அவற்றில் இருண்மையோ இறுக்கமோ காணாது காதல், கடமை, சமயம், சமூகம் என்று ஊடுருவிச் செல்கின்றன. கவிதைகள் மரபிலும் புதுக்கவிதையிலும் காணப்பட்டாலும் சிறுவர் பாடலாகவும் கிராமியப் பாடலாகவும் கலவைசெய்த நூலாகப் பரிணமிக்கின்றது.

ஏனைய பதிவுகள்