11648 பிரபஞ்ச சுருதி.

குப்பிழான் ஐ.சண்முகன். பருத்தித்துறை: சித்தம் அழகியார், ஞானாலயம், 117, விநாயக முதலியார் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).

x, 62 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-7650-00-5.

ஐ. சண்முகலிங்கம் (01.08.1946) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலை சஞ்சிகையின் ஆரம்பகால ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். இந்நூல் இவர் தன் இளமைக்காலத்தில் எழுதிய அறுபதுக்கும் அதிகமான கவிதைகளில் தேர்ந்த 30 கவிதைகளை உள்ளடக்கியது. கலைக்கோதை, கண்ணன், கம்பன் படைத்த இலக்கியம், கவிதை பிறந்த கதை, துயில், பாரதியார், பூம்புகாரில் ஒரு நாள், செந்தியரை வாழ்த்துகின்றோம், தாதியாம் தெய்வமகள், இனிது இனிது இளமை இனிது, நேயக்கன்னி, நெஞ்சிலே தைத்த நெருஞ்சி, ஒரு சோகக் கவிதை, மாலை, காவியேன் கட்டவேண்டும், அழகு வாய்ந்த யாழ்ப்பாணம், பொங்கிடும் மங்களம், வள்ளுவம், வேலை தேடும் வேலை, இன்றைய ஈழத்தில் பாரதி இருந்தால், பேராதனை முருகன் ஆற்றுப்படை, நீண்ட மூச்சு, காதல் தத்துவம், வாழ்க்கை, அணுவில் ஓர் உலகம், கூத்து, பிரபஞ்ச சுருதி, வீர வியட்நாமிற்கு, நெல்லு விளைந்ததடி, சிறிசுகளின் பிரகடனம் ஆகிய தலைப்புகளில் இந்த 30 கவிதைகளும் இடம்பெறுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60809).

ஏனைய பதிவுகள்