க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). எட்வேட் இதயச் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா L5C 2T7: ஜீவா பதிப்பகம், 215 ஸ்ரெயின்ரன் டிரைவ், மிஸிஸாகா, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, ஜுலை 1988. (கனடா L5C 2T7: ரிப்ளெக்ஸ் அச்சகம், 215 ஸ்ரெயின்ரன் டிரைவ், மிஸிஸாகா, ஒன்ராரியோ).
(8), 160 பக்கம், விலை: கனேடிய டொலர் 10., அளவு: 21×14 சமீ.
இயேசு புராணம், தமிழழகி, ஈழத்துப் போர்ப்பரணி எனப் பல்வேறு நூல்களையும் வழங்கிய ஈழத்துப் பூராடனார் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. மல்லிகைப் பந்தல், இரவின் விழிப்பு, விடியாத பகல்கள், பரதத்தின் பாவை, கை கண்டேன் கையே கண்டேன், ஏனிந்தப் பதட்டம், கண்டுகொண்டேன், அத்தான் என்ற முத்தான சொல், எனக்கொரு தமிழச்சி, காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, ஒருமனப் பட்டாற் திருமணம், அம்மன் சடங்கு, ஒப்பந்த உறுதிப்பாடு, குடிபுகுந்தோம், மானானாள், மீனானாள், வானம்பாடியானாள், தேனானாள், தென்றலானாள், வானானாள், வாழ்கின்றேன் ஆகிய 21 தலைப்புகளில் இந்நூல் கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13266).