11727 உக்ரேனிய அறிஞர் இவன் ஃபிராங்கோ கவிதைகள்.

இவன் ஃபிராங்கோ (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 600024: இளவழகன் பதிப்பகம், 4, இரண்டாவது தெரு, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (சென்னை 5: கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ்).

(8), 9-48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

உக்ரேனிய கவிஞரான இவன் ஃபிராங்கோ (1856-1916) எழுதிய கவிதைகளின் தமிழாக்கம். இதில் (The Fortune Teller) குறத்தி சொன்ன குறி, (The Spirit of revolt) எழுச்சியின் இயல்பு, (From the Prison Dock) கைதிக் கூண்டில் இருந்து, (To Comrades from Prison) சிறை சென்றுவந்த தோழர்களுக்கு, (Decree against Famine) பஞ்சத்தைப் போக்கிய விந்தை, (Reflections of a Turning Point) திருப்புமுனையின் நிழல்கள், (A Parable about Foolishness) பறவையின் அறிவுரை, (Emigrants) குடிபெயர்வோர்,  (What is in you) உன்னுள்ளே உள்ளது, (Songs of Distress) துயரப் பாடல்கள், (Welcome Spring) வசந்தமே வருக, (Thunder Storms)இடி இடிக்குது, (Thoughts Children) எண்ணக் குழந்தைகள், (My beloved Ukraine) என் அன்புமிகு உக்ரேன், (The World is asleep) உலகம் உறங்குகிறது, (Forty years) நாற்பது ஆண்டுகள், (Why be silent?) மௌனம் ஏன், (The Path makers) நடைபாதை அமைப்போர் ஆகிய கவிதைகள் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21167).

ஏனைய பதிவுகள்