ஹென்றிக் இப்சன் (ஆங்கில மூலம்), குழந்தை ம. சண்முகலிங்கம் (தமிழாக்கம்), க.திலகநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 154 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-507-9.
A Doll’s House என்ற இந்நாடகநூல் Henrik Ibsen என்ற நோர்வேஜிய நாடகாசிரியர் 1879இல் டேனிஷ் மொழியில் Et dukkehjem என்ற மூலத்தலைப்பில் எழுதி டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் 21.12.1879 இல் முதலில் மேடையேற்றம் கண்ட நாடகத்தின் தமிழ்ப்பிரதியாகும். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் இயலாமையை இந்நாடகம் அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தது. இந்நூல் இப்சனின் A Doll’s House என்ற அந்நாடகத்தின் ஆங்கில வழித் தமிழாக்கம் மாத்திரமல்ல. ஹென்றிக் இப்சன் (1828-1906) பற்றிய வாழ்க்கை வரலாற்றை முதலிலும், இப்சனின் ஒரு பாவையின் வீடு என்ற நாடகத்தின் அறிமுகத்தை இரண்டாவதாகவும் பதிவுசெய்திருக்கின்றது. மூன்றாவதாக தமிழாக்கம் செய்யப்பட்ட மேற்படி நாடகம் பிரசுரமாகியுள்ளது. பின்னிணைப்பாக நா.சுந்தரலிங்கம் அவர்களின் ‘மெய்மை நாடகங்கள்- பண்பும் பயனும்’ என்ற தலைப்பிலான கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.