11763 ஹோமர் மகாகவியின் இலியட்.

ஹோமர் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, வைகாசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

Lv, 544 பக்கம், புகைப்படம், விலை: கனேடிய டொலர் 80., அளவு: 21×13.5 சமீ.

பண்டைக் கிரேக்க இதிகாசங்கள் இரண்டில் ஒன்று ஒடிசி (ழுனலளளநல)யாகும். மற்றையது இலியட் என்பதாகும். இலியட், ஹோமர் என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள பாடல்களில் வாய்வழி மரபுகளுக்கான சான்றுகள் ஆங்காங்கே காணப்படுவதால் இது ஒன்றுக்கு மேற்பட்டோரால் ஆக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் கருதப்படுகின்றது. இன்று வழக்கிலுள்ள பழங்காலக் கிரேக்க இலக்கியங்களில் இதுவே பழையது. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட முன்னொடி இலக்கியங்களில் இதுவும் ஒன்று. இதிலுள்ள பாடல்கள், கிரேக்கர்களால் இலியன் அல்லது திராய் (வுசழல) எனப்பட்ட நகரம் முற்றுகை இடப்பட்ட, டிரோஜான் போரின் பத்தாம் மற்றும் இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைக் கூறுகின்றது. இதன் கரு கிரேக்கப் போர் வீரனான ஆக்கிலீசையும், மைசீனி அரசன் அகமெம்னான் மீது அவனுக்கு இருந்த கோபத்தையும் பற்றியது. இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஸ்பார்ட்டாவின் அரசனான மெநிலாஸின் மனைவியான ஹெலனை திராய் நாட்டு இளவரசனான பாரிஸ் கவர்ந்து கொண்டு தனது நாட்டிற்கு வந்துவிடுகிறான். கிரேக்கர்களின் பெரும் படை ட்ராய் நகரத்தை முற்றுகையிடுகிறது. இதனிடையே கிரேக்க இராணுவம் முழுவதிலும் பிளேக் நோயை ஏற்படுகிறது. பிளேக் நீங்கிய பின்னர் கிரேக்க படைகள் முன்னேறுகிறது. போர் தீவிரமாக நடைபெறுகிறது. ட்ரோயின் தளபதியான ஹெக்டர் அஜக்ஸ{டன் மற்போர் புரிந்து தோற்கடிக்கிறான். அதன் பின்னர், ஒரு இரவு போரில் கிரேக்கர்களின் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை தாக்குகிறான். பெட்ராகிளஸ் போரில் ஆக்கிலியசின் படைவீரர்களுடன் போருக்கு செல்கிறான். அவர் டிராஜன்கள் திடீர் தாக்குதலை முறியடிகிறார். மேலும், ட்ரோஜன் செர்போடோனை கொல்;கிறான். இறுதியாக, அவன் ஹெக்டரால் கொல்லப்பட்டான். போர் அவனது உடலைச் சுற்றித் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆக்கிலீஸ்; ஹெக்டோருடன் கடும்போரிட்டு அவனைக் கொல்கிறான். அவன் உடலைத் தனது ரதத்தில் கட்டி இழுத்து வருகிறான். அதன் பின்னர், பெட்ராகிளஸின் ஆவி அவன் கனவில் வந்து தனது உடலை எரிக்குமாறு வலியுறுத்தியது. அதன் பின்னர், அவன் உடல் எரிக்கப்பட்டது. இரவில் யாருக்கும் தெரியாமல் பிரியம் மன்னர் அக்கீலியசிடம் வந்து தனது மகனது உடலைத் தருமாறு கெஞ்சி வாங்கிக் கொண்டு சென்று அவன் உடலுக்கு எரியூட்டுகிறான். இலியட் கதையை அழகு தமிழில் ஈழத்துப் பூராடனார் காவியமாக்கித் தந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11221).

ஏனைய பதிவுகள்

17236 சிறுவர் உரிமைகள்: இலங்கை அனுபவம்.

சாவித்திரி W.E.குணசேகர, சந்திரா குணவர்த்தன, N.G.குலரட்ன (பதிப்பாசிரியர்கள்). நுகேகொட: இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, 1வது பதிப்பு, 1998. (நுகேகொட: இலங்கை திறந்த பல்கலைக்கழக அச்சகம், நாவல). x, 256 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,