11776  சிவகுமாரன் கதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (நூலாசிரியர்), க.தா.செல்வராசகோபால் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான பாதை, தேற்றாதீவு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1984. (மட்டக்களப்பு: மனோகரா அச்சகம்).

(18), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

பாரதி நூற்ருண்டு வெளியீடாக 1982 இல் வெளிவரவிருந்த இத்தொகுப்பு தவிர்க்க முடியாத காரணங்களினல் 1984 ஓகஸ்ட்டில் வெளியாகிறது. ‘சித்திரகுப்தன்” ‘விலோஜனி” ஆகியனவும் இவருடைய புனைபெயர்களாகும். 1959 முதல் 1965 வரையிலான ஆறு வருடங்களில் பிரசுரமான சில கதைகளின் தொகுப்பு இது. இக் கதைகளில் பெரும்பாலானவை உத்தி பிரயோகத்திற்காக, பத்திரிகை ரகக் கதைகள் வார்ப்பில் எழுதப்பட்டவை. சில கதைகள், உளவியல் சார்ந்தவை பெரும்பாலான கதைகள், கொழும்புவாழ் மேல்தட்டுப் பாத்திரங்களைத் தீட்டுபவை. இக்கதைகள் சிலவற்றில் சிங்களத் கதாநாயர்கள் வருகிருர்கள். கதைகள் சிலவற்றில் எழுத்தாளர்களே முக்கிய பங்கெடுத்தனர். கற்பனையாகி எழுதப்பட்ட இக்கதைகள் நகர்ப் புற வாழ்க்கையை – அதுவும் கொழும்பு வாழ்க்கையின் சில அம்சங்களே சித்திரிப்பவை. சுவாரஸ்சியமாக அமையவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவை இக்கதைகள். ‘கொடகே’ வாழ்நாள் சாதனையாளர் (2012)இற்கான கௌரவ சாஹித்திய விருதினைப் பெற்ற கே. எஸ் சிவகுமாரன் அவர்களின் ஆரம்பகாலப் படைப்புகளான சிறுகதைத் தொகுதி. ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார். பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலப் பட்டதாரியான இவர் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும்; கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர். இலங்கை வானொலி, த ஐலண்ட், வீரகேசரி, முதலான ஊடகங்களிலும் பணியாற்றியவர். தற்போதும் டெயிலிநியூசில் இவரது பத்தி எழுத்துக்களை பார்க்கலாம். இலங்கை வங்கி உட்பட பல வர்த்தக ஸ்தாபனங்களிலும் இவர் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியிருக்கிறார். இலங்கை வானொலியின் தமிழ் வர்த்தகசேவையில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் செய்திப்பிரிவில் துணை ஆசிரியராகவும் சேவையாற்றிய கே.எஸ். சிவகுமாரன் இலங்கையில் அமெரிக்கத்தூதரக தகவல் பிரிவிலும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். நவமணி இதழின் ஸ்தாபக ஆசிரியரும் இவரே. கொழும்பில் மூன்று சர்வதேசப்பாடசாலைகளிலும் அமெரிக்கா, மாலைதீவு, ஓமான் ஆகிய நாடுகளிலுள்ள பாடசாலைகளிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. இந்தியாவில் நடந்த பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31591).

ஏனைய பதிவுகள்

VD CASİNO 2024 GÜNCEL GİRİŞ RESMİ SİTE

Содержимое VD CASİNO: 2024 Yılında Resmi Siteye Nasıl Girilir? VD CASİNO Giriş Adımları Mobil Cihazlar İçin Özel Notlar VD CASİNO’da Yeni Üyelik Süreci Başlangıç Adımları