இரா.சடகோபன். பத்தரமுல்லை: சட்டத்தரணி இரா.சடகோபன், 17B, ரிச்சர்ட் டி சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
269 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-42706-0-2.
மலையகப் படைப்பாளி சட்டத்தரணி இரா.சடகோபனின் முதலாவது கவிதைத் தொகுப்பு 1998இல் வசந்தங்களும் வசீகரங்களும் என்ற தலைப்பில் ;வெளிவந்தது. அக்காலத்தில் எழுதப்பட்ட சொந்தமண்ணின் அந்நியர் என்ற சிறுகதை 1998ஆம் ஆண்டு துரைவி-தினகரன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. அதுவே இத்தொகுப்பின் தலைப்புக் கதையாகியுள்ளது. அக்கதையுடன், நேர்கோடுகள் வளைவதில்லை, சொல்லாமலே, உன்னைக் கொன்றவர்கள் யார், சூடேறும் பாறைகள், சொந்த மண்ணின் அந்நியர், நெஞ்சினலைகள், செவப்பு கலருல ஒரு காரு, தேன்மொழி அல்லது இளம்பரிதி, கருஞ்ஜுலை, புன்னகை மறைந்த அந்த நாளில், கரிச்சான் குருவி, இன்னும் எத்தனை நாள், செல்லி அல்லது மணிராசு, கரையைத் தொடாத ஓடங்கள், சூரியன் சாட்சியாக ஆகிய 15 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.