நா.மாணிக்க இடைக்காடர். கொழும்பு 4: மங்கள வெளியீடு, 35, கின்றோஸ் அவென்யூ, 1வது பதிப்பு, ஜுன் 1990. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
viii, 138 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×14 சமீ.
உண்மை நாகரிகம் எது?, மீண்டும் எலியாகுக, அக்கரைப் பச்சை, நட்புக்கும் பண்புக்கும் நல்லதோர் நாடு, சிறியதும் பெரியதும், ஊவா மாகாணத்தில் உலா வந்தேன், பிழையும் மன்னிப்பும், இந்து சமுத்திரத்தில் ஓர் இந்திர லோகம், இந்தோனேஷியாவில் இந்து கலாச்சாரம், பாடலுக்கும் ஆடலுக்கும் ஒரு பாலித்தீவு, காதல் முதலா கல்யாணம் முதலா?, துருக்கியில் முப்பது நாட்கள், முன்னேறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்து, மௌனத்தின் மாட்சி, உய்யும் வழி, வன்னியை வளர்த்த வணங்காமுடியோன், வடக்கிலே பனையும் தெற்கிலே பலாவும், உத்தர சிதம்பர நடராஜர் கோயில், நல்லதையே செய்யுங்கள், குருஷேத்திரத்தின் பின், அந்த ரெயிலில் நானும் பிரயாணம் செய்தேன், எண்ணரிய கைவன்மையிருந்தால் எம் மண்ணிலும் சிறப்பாக வாழலாம், அம்பிகைபாகன் ஓர் அற்புத மனிதன், தானாடா விட்டாலும் சதை ஆடுகிறது, விவசாயத்துறையில் குடாநாட்டின் எதிர்காலம், நிபுணத்துவத்திற்கும் அப்பாற்பட்ட கோட்பாடுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 26 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10506).