ஜெயரெத்தினம் திவ்வியநாதன். கொழும்பு: ஜெயரெத்தினம் திவ்வியநாதன், 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ், 271/5 செட்டியார் தெரு).
vi, 93 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
ஆசிரியரின் சிறு கட்டுரைகள், கருத்துக்கள், கவிதைகள் கொண்ட பலவினத்தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. கனி தருபவன் என்று தனது நூலுக்கான அறிமுகம் தொடங்கி, ‘மா’ என்ற பிரிவில் மெல்லத் தமிழினி, சங்கத் தமிழில் சம்ஸ்கிருதம், அழகு தமிழில் ஆங்கிலம் கலப்பு, இனிய தமிழில் இன முரண்பாட்டின் எதிரொலி, தனித்தமிழும் தமிழின் தனித்துவமும், தாய்த் தமிழும் தாய்மண் விட்டகன்றோரும், புலம்பெயர்ந்தோர் மனம் புண்படலாமா?, பாதம் பதிக்கும் இடமெங்கும் பைந்தமிழ் விதைக்கும் தமிழர், மெல்லெனத் தமிழ் வடிவம் – சொல்லும் வகையிலும் முழு முனைப்பு, ஆகிய ஆக்கங்களைத் தொகுத்து, தொடர்ந்து வரும் ‘பலா’ என்ற பிரிவில் தீந்தமிழும் தமிழ்த் திரைப்படங்களும், திசை மாற்றும் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படத்துறை கனியிருப்பக் காய் கவரலாமோ?, மொழியை முறைப்படி மொழிவோம், ‘ங’ ப் போல் வளை, ‘ங”ப் போல் வளைவோம், ஊடகங்களினூடே, அவதாரமாகுமா? சமையமா? ‘ப்ரியா’ சரியாகுமா?, வெல்லுந் தமிழ் வெல்லும் ஆகிய படைப்புகளையும் தொகுத்துத் தந்து ‘வாழை’ என்ற இறுதிப் பிரிவில் கவிதைகள், விடுகதைகள், கதை, சிரிப்பதற்குச் சில துணுக்குகள், சிரித்திரன் மகுடி பற்றிய சில தொகுப்புகள் என இந்நூலில் தனது பலவினப் படைப்பக்களை வாரி வழங்கிப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஆசிரியரின் முதலாவது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34714).