11958 பொங்குதமிழ்.

கனகரவி (இயற்பெயர்: க.இரவீந்திரன்). வவுனியா: விண்மணி வெளியீட்டகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (வவனியா: சூரியா பதிப்பகம்).

(4), 54 பக்கம், புகைப்படங்கள், தடுகள், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

ஈழத்தமிழர் போராட்டத்தின் நியாயங்களை கலைநிகழ்வுகள் மூலம் உலக அரங்கில் முன்வைக்கும் நோக்குடன்  பொங்கு தமிழ் நிகழ்வுகள், இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் 2001 இல் முதன்முறையாக நிகழ்த்தப்பட்டது. அங்கு பின்வரும் மூன்று வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம். அதனைத் தொடர்ந்து ஈழத்தின் பிற பகுதிகளிலும், புகலிட நாடுகளிலும் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பொங்கு தமிழ் உலகத் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராகவும் தமது குரலை வெளிப்படுத்தும் ஒர் அரங்காகச் செயற்பட்டது. பல்வேறு சுதந்திரங்கள் உறுதி செய்யப்பட்ட மேற்குநாடுகளில் வெளிவரும் ஒரு குரலாகப் பரிமாணம் பெற்றது. பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தாலும், இது தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் கொண்டதாக கொள்ள முடியாது. தமிழர்கள் இலங்கை அரசின் கொடுமைகளுக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு அரங்காகவும் இதைக் கருதலாம். பொங்கு தமிழ் நிகழ்வுகள் உயிர்த்துடிப்புடன் ஆரம்பித்த வேளையில் ஊடகவியலாளர் கனகரவி பொங்குதமிழ் நிகழ்வின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எழுதிய கட்டுரைகள் இவை.

ஏனைய பதிவுகள்

Circu Premie Sleutel

Inhoud Gokkasten and Videoslots: football legends slotmachine Wettelijk Offlin Raden Te Holland: Dit Exporteren Jou Betreffende Onz Toelichtingen! Free Spins Bonussen Promoties Voordat Bestaande Toneelspeler