11970 மதுரை எரிகிறது.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்:மகேந்திரராசா). வவுனியா: நா.வை.குமரிவேந்தன்,  குமரித் தமிழ்ப் பணிமன்றம், 16/2, மருத்துவமனை சுற்றுவட்ட வீதி, குடியிருப்பு, 1வது பதிப்பு, ஆவணி 2012. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

100 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 21.5×15 சமீ.

இந்நூல் தமிழின் தமிழரின் பெருமையைக் கூறுவதும், பகுத்தறிவுச் சிந்தனையை வளர்ப்பதுமான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும். ஆசிரியரின் அறிமுகவுரையான ‘என்னுரை’ யைத் தொடர்ந்து, இயற்கை போற்று, மதுரை எரிகிறது, நிலைபேண் அபிவிருத்தியும் தமிழன் கால்வாயும், சேரநாடு கேரள நாடானது, மனித உரிமை மீறலாக சாதீயம், தமிழ் ஒருங்கு குறித்தொகுப்பியம், தமிழர் வரலாற்றில் வானியல், தமிழ் இலக்கியமும் சமூகமும், சைவமும் தமிழும் தமிழனின் இரு கண்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்