அழகாபுரி அழகுதாசன், மு.சு.மா.முத்தமிழ்ச் செல்வன், சீவல்புரி சிங்காரம், காசிதாசன் (தொகுப்பாசிரியர்கள்). திருச்சி 620001: அழகுமீனாள் பதிப்பகம், 17V, இராசா குடியிருப்பு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகச் சாலை, 1வது பதிப்பு, 1982. (திருச்சி 1: சரவணா பிரிண்டர்ஸ்).
xiv, 180 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ.
தமிழகத்தைச் சேர்ந்த அழகாபுரி அழகுதாசன், சீவல்புரி சிங்காரம் ஆகியோரும் மலேசியாவைச் சேர்ந்த மு.சு.மா.முத்தமிழ்ச் செல்வன், காசிதாசன் ஆகியோரும் இணைந்து தொகுத்துள்ள உலகத் தமிழர் கவிதைகள். பின்வரும் ஈழத்தமிழர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. செ.குணரெத்தினம், பொன் பூலோகசிங்கம், ஈழமேகம், கலிங்டன், க.அருள் சுப்பிரமணியம், வடகோவை வரதராஜன், கண்டி எம்.இராமச்சந்திரன், நீர்கொழும்பூர் பொன்னிவளவன் மு.ஹ.ஷெய்கு இஸ்ஸித்தீன், சி.சுப்பிரமணியம், எஸ்.முத்துமீரான், மாத்தளை வி.தங்கராஜா, யாழ். ஜெயம், கிளிநொச்சி திருச்செல்வம், துறைநீலாவணை ஜீவா ஜீவரெத்தினம், அ.ஜெயபாலன், திருக்கேதீஸ்வரம் என்.இராஜப் புஷ்பவனம், அல்வாய் ஞானப்பிரகாசம், ஆத்தியடி ஈ.ஆறுமுகம், சாரணா கையூம், வெற்றிவேல் விநாயகமூர்த்தி, பெரிய கட்டைக்காடு மாரிசால்பிள்ளை, அகளங்கன், வே.ஐயாத்துரை, கலா குமரிநாதன், இளம்பரணன், பொலிகை ச.திருப்பதி, தா.குகதாசன், வி.நடனசேகரம், தம்பிஐயா தேவதாஸ், வேம்பை ம.ஸ்ரீமுருகன், நிலா தமிழின்தாசன், இர.திருநாவுக்கரசு, லீலா வினோதன், கல்முனை நோ.இராசம்மா, நா.சிவபாதசுந்தரனார், கா.வை.இரத்தினசிங்கம், கோ.தியாகராசன், இ.விக்கினேஸ்வரன், த.கனகரத்தினம், வை.கங்கைவேணியன், ம.குலசிங்கம், மு.உ.ஷெரீப். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21990).