பழ.நெடுமாறன், த.செயராமன். தமிழ்நாடு: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை, விளார் சாலை, தஞ்சாவூர் 613006, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
80 பக்கம், வண்ணப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×28 சமீ.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழரின் நினைவாக, ஓவியர் புகழேந்தியின் கோட்டுச்சித்திர வரைபுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கற்சிற்பங்கள் கொண்டமைந்தது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாகும். 15.12.2010இல் தொடங்கப்பட்ட வேலைத்திட்டம் 15.10.2013 அன்று நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. அம்மண்டபம் பற்றிய விளக்கக் குறிப்புகள் அடங்கிய வண்ணப் படங்களின் தொகுப்பாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.