12002 – நம்பமுடியாத உண்மைகள்.

ஏ.இக்பால். பேருவளை: பேசும் பேனா பேரணி, 26/6, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1992. (பேருவளை: குவிக் சப்ளையர்ஸ், 26ஃ6, பள்ளிவாசல் வீதி).

(10), 50 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 18×12.5 சமீ. இந்நூலில் 78 துணுக்குச் செய்திகளாக, வரலாற்றில் நிகழ்ந்த நம்பமுடியாத பல சுவைமிகுந்த தகவல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். 1974களில் தினகரன் வெள்ளிக்கிழமை ‘இஸ்லாமுல் ஆலம்’ என்ற பகுதியை ஜனாப் எஸ்.எம்.ரி.எம். நிசார் என்னும் இளம் பட்டதாரி தயாரித்தளித்து வந்தார். அதிலே தொடர்ச்சியாக 1977வரை ‘நம்பினால் நம்புங்கள்’, ‘நடந்தது: நம்பினால் நம்புங்கள்’ என்னும்
மகுடங்களின்கீழ் கவிஞர் அ.இக்பால் அவர்களால் எழுதப்பட்ட அரபுலக வரலாற்றுக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23173).

ஏனைய பதிவுகள்