சீ.எம்.சபீக், க.சிந்துஜா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம், இல. 14, சுதந்திர வழி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 7: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை, இல. 14, சுதந்திர வழி).
(8), 145 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 28×20.5 சமீ., ISBN: 2550-2700.
இந்நூல் விபரப்பட்டியல் 1941-1961 காலகட்டத்திற்குரிய இலங்கைத் தமிழ்நூல்களின் விபரங்களை உள்ளடக்குகின்றது. பக்கங்கள் 1-80 வரை பாடவாரியாக ஒழுங்கமைக்கப்பெற்ற நூற்பட்டியலும், பக்கங்கள் 81-145 வரை அகரவரிசையில் அமைந்த ஆசிரியர்/தலைப்பு அட்டவணையும் இடம்பெற்றுள்ளன.