12008 – நாவலரியல்: ஆறுமுக நாவலரினதும் ஆறுமுக நாவலர் பற்றியதுமான வெளியீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்விபரப் பட்டியல்.

இ.கிருஷ்ணகுமார், ஆ.சிவநேசச்செல்வன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, 1வது பதிப்பு, 1979. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(4), 32 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 நாவலரியல் நூற்கண்காட்சிக் குழுத் தலைவர் ச.அம்பிகைபாகன் அவர்களின் முகவுரையுடன் கூடிய இந்நூல்விபரப்பட்டியல், ஆறுமுக நாவலரின் நூல்கள், ஆறுமுக நாவலர் பற்றிய நூல்களும் நூல்களின் உட்குறிப்புக்களும் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் விபரப்பட்டியலில் உபயோகப் படுத்தப்பட்ட குறுக்கங்கள் நூலின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003932).

ஏனைய பதிவுகள்

12234 – புதிய அரசியலமைப்பில் மனித உரிமைகள்.

மனித உரிமைகள் அமைப்பு. வெளியீட்டுத் தகவல் தரப்படவில்லை. (கொழும்பு 10: Associated Newspapers of Ceylon Ltd, 35, D.R. Wijewardena Mawathe). 42 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5

14312 பொருளாதார மத்திய வழி: பொதுமக்கள் செல்வ நிலையை உயர்த்த ஓர் திட்டம்.

ஜஸ்டின் கொத்தலாவலை (ஆங்கில மூலம்), ஏ.ஆர்.அமிர்தையா, டபிள்யூ. ஸ்டனிஸ்லாவுஸ் பெர்னாண்டோ (தமிழாக்கம்). கொழும்பு 4: பொருளாதார மத்திய வழி இயக்கம், இல. 2, கொத்தலாவலை டிரைவ், 1வது பதிப்பு, வைகாசி 1958. (மஹரகம: சமன்

12788 – ஈடிப்பஸ் வேந்தன்: கிரேக்க நாடகம்.

சொவக்கிளிஸ் (கிரேக்க மூலம்), மொழிமாறன் (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, இணை வெளியீடு, சென்னை 600002: சவுத் விஷன்,