இரா.கோபிநாத். கோயம்புத்தூர் 641002: Pee Vee Publishers, 118, West Sambandam Road, R.S.Puram, 1வது பதிப்பு, மே 2005. (கோயம்புத்தூர் 641002: Pee Vee Graphics).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 12×17.5 சமீ.
எல்.ஐ.சீ. ஸ்ரீலங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய நூலாசிரியர், ‘நமது நம்பிக்கை’ மாத இதழில் வெளியிட்ட தொடர் கட்டுரையின் நூல்வடிவம். படைப்பாற்றல் திறன் என்பது நம் அனைவருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். சாதாரண வாழ்க்கையில் தொடங்கி உற்பத்தித்துறை, மேலாண்மை, நிர்வாகத்துறை, விற்பனைத்துறை, சேவைத்துறை என அனைத்துத் துறைகளிலும் படைப்பாற்றல் திறமையால் மேன்மையடைய முடியும் என்பதனை அனுபவ வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். படைப்பாற்றலை வெளிக்கொண்டுவருவதில் உள்ள தடைகளைத் தகர்த்து உங்களாலும் வெல்ல முடியும் என்பதற்கு இந்த நூல் வழி காட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36975). மேலும் பார்க்க: 12333