K.T.இராஜரட்ணம், N.வரதராசா. கரவெட்டி: இந்திரா இராஜரட்ணம், கொல்லன்தோட்டம், நெல்லியடி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1984. (கரவெட்டி: கலாலயா, நெல்லியடி).
(4), 114 பக்கம், விலை: ரூபா 24.00, அளவு: 20×14 சமீ.
விஞ்ஞானமும் விஞ்ஞான முறையும், விஞ்ஞான முறையின் இயல்பு, விஞ்ஞான முறை, கருதுகோள், நோக்கலும் பரிசோதனையும், விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் வேறுமுறைகள், விஞ்ஞானப் பொதுமையாக்கங்கள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் K.T.இராஜரட்ணம், பேராதனை, களனிப் பல்கலைக்கழகங்களின் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இணை நூலாசிரியர் N.வரதராசா, கரவெட்டி/ நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9547).