ஸ்ரீ வே.கந்தையா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ.வே.கந்தையா, அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, ஆவணி 1953. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
24 பக்கம், விலை: சதம் 10., அளவு: 17×11.5 சமீ.
சைவஞான நூல்களைக் கற்றலும் கற்பித்தலும் ஞானபூசையாகுமென்று சிவஞான சித்தியார் கூறுகின்றது. ‘சிவஞான சித்தியார்’ சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்க எழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும். சிவஞான போதத்தின் வழி நூலான இதனை இயற்றியவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இவர் சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்ட தேவரின் மாணவன். சுபக்கம் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதியாகும். சுபக்கம், 328 பாடல்களால் ஆனது. இந்நூலில் ஸ்ரீ வே.கந்தையா அவர்கள் சிவஞானசித்தியாரின் முதலாவது சூத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து விரிவாக விளக்கியிருக்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077).