12031 – பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் வழங்கிய அமிர்தத் துளிகள்.

தா.சியாமளாதேவி. திருக்கோணமலை: சிவயோக சமாஜம், பிரதான வீதி, 1வது பதிப்பு, மாசி 1999. (கொழும்பு: லின்ராஜ் பிரின்ரேர்ஸ், 133, 1வது டிவிஷன், மருதானை).

x, 58 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ.

சுவாமியின் அணுக்கத் தொண்டராகவிருந்து அவர் வாயிலாகவே பெற்ற பல பொன்மொழிகளையும், கேட்டும் அனுபவித்தும் பெற்ற விடயங்களையும் சேர்த்து இந்த ஆன்மீக நூலை தா.சியாமளாதேவி எழுதியுள்ளார். 1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி ஆதிசங்கரர் பிறந்த கேரள நாட்டிலே கெங்காதரானந்தா சுவாமிஜி அவர்களும் பிறந்தார். இளம் வயதிலேயே சுவாமிஜி துறவற வாழ்க்கையிலே நாட்டம் காட்டினார். பல்வேறு சுவாமிகளுடன் சேர்ந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் யாத்திரை செய்து, தமது 19வது வயதிலே, 1940ம் ஆண்டளவில், இலங்கை வந்து சேர்ந்தார். இங்கு 1940ஆம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி வரை சுவாமிஜி தன்னுடைய தெய்வீகப் பணியை ஆற்றினார். சுவாமிஜி தன்னுடைய ஞான வாழ்க்கையைத் திருக்கோணமலையில் ‘சிவயோக சமாஜம்’ என்னும் ஆச்சிரமத்தை ஆரம்பித்து வாழ்ந்தவர். சுவாமிஜி அவர்கள் பன்குளத்திலுள்ள சமாஜத்திற்குரிய நெல்வயலிலே கடுமையாக உழைத்து அதனால் பெற்ற வருமானத்தைக் கொண்டு அநாதை இல்லம் ஒன்றை நடத்தினார். வெள்ளம், புயல் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களில் ஏழைகளைப் பராமரித்து, உணவு, உடை கொடுத்து வந்தார். சுவாமிஜி யின் ஆச்சிரமத்தில் பூஜை முறைகள் அணுவளவும் பிறழாது நடாத்தி, சத்சங்கம் ஒன்றை ஸ்தாபித்து, பக்தர்களை நல்வாழ்க்கையில், வழிநடத்தியிருந்தார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24788).

ஏனைய பதிவுகள்