12042 – வெசாக் சிரிசர 1996.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), ம.மு.உவைஸ் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: பிரசுரக் கமிட்டி, அரசாங்க ஊழியர் பௌத்த சங்கம், 53ஃ3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு 10: ANCL, லேக் ஹவுஸ், டீ.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை).

(10), 11810(2) 10 14, (10), 112 பக்கம், சித்திரங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக அரசாங்க ஊழியர் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக மேதகு ஜனாதிபதி (சந்திரிக்கா பண்டாரநாயக்க) அவர்களின் வாழ்த்துச் செய்தி, சிந்திப்பதற்கான சில பயனுள்ள விடயங்கள் (பீ.எம்.விஜேகூன்), அறமுரைக்கும் பௌத்த இந்து நூல்கள் இரண்டு: தம்மபதமும் திருக்குறளும் (த.கனகரத்தினம்), புத்தரும் சுஜாதையும் (ம.மு.உவைஸ்) ஆகிய நான்கு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழறிஞர் ம.மு.உவைஸ் இவ்விதழின் தமிழ்ப் பகுதிப் பதிப்பாசிரியராக 15 ஆண்டுகளாகப் பணியாற்றியவர். தனது 74ஆவது வயதில் மறைந்துவிட்டார். அவரது பங்களிப்புடன் வெளிவந்த இறுதி ‘வெசாக் சிரிசர’ இதழ் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15058).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

14581 எதனை வேண்டுவோம்: கவிதைத் தொகுதி.

சுமதி குகதாசன். கொழும்பு 6: ஆர். ஜனாதன், 28, 4/2, பசல்ஸ் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கொழும்பு 6: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). (18), 19-77 பக்கம், விலை:

12041 – புத்த தர்மம் அடிப்படைக் கொள்கைகள்.

எஸ்.ஏ.எதிரிவீர (ஆங்கில மூலம்), வீ.சித்தார்த்தா (தமிழாக்கம்). சென்னை 600 008: பிக்கு யு.ரத்னபால, மகாபோதி சங்கம், 17, கென்னட் லேன், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600 007: குளோப் பிரின்டோகிராப்பர்ஸ், 14, முருகப்பா

14670 பத்தினித் தெய்வம்: சிலப்பதிகார நாடகங்களும் வில்லுப்பாட்டுக்களும்.

சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜுலை 2016. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). (4), 100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7973-02-9.

14351 உசாத்துணையிடல் பாணிகள்: APA உசாத்துணையிடலுக்கான வழிகாட்டல் குறிப்புளுடன்.

ப.மு.நவாஸ்தீன், M.U.M.ஸபீர். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, கார்த்திகை 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 20.5×15 சமீ.,

12236 – இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு.

தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 25.00, அளவு: 21.5×13.5 சமீ. இலங்கை மீதான