12064 – ஒரு சைவ வாசகம்: தமிழ் மொழிபெயர்ப்புடனானது.

சி.பொன்னம்பலம். காரைநகர்: கூத்தப்பிரான் பதிப்பகம், 1வது பதிப்பு, மே 2008. (காரைநகர்: கூத்தப்பிரான் பதிப்பகம்).

128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1472-13-9.

புலம்பெயர்ந்த சைவத் தமிழ்ச் சிறார்களை மனதிற்கொண்டு சைவ சமயம் பற்றிய அடிப்படை அறிவினை ஆங்கிலத்திலும் தமிழ் மொழிமாற்றத்துடனும் இந்நூல் வழங்குகின்றது. சிதம்பரம், ஈழத்துச் சிதம்பரம், தமிழ் எழுத்துகளுக்கிணையான ஆங்கில எழுத்துக்கள், சைவ சமயம் தொடர்பான அருஞ்சொல்லகராதி, கடவுளை ஏன் வழிபடவேண்டும்?, வேதம், மாணிக்கவாசகர், தேவாரம், ராஜராஜசோழன், ஆறுமுக நாவலர், சிவலிங்கம், திருக்கோணேஸ்வரம், தைப்பொங்கல், உருத்திராட்ஷம், தீபங்களும் விளக்குகளும், கண்ணப்பர், மண்டூர், முன்னீஸ்வரம், காலி சிவன் கோவில் என இன்னோரன்ன 51 தலைப்புகளில் இந்நூல் தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் பதிவுசெய்து வைத்திருக்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47392).

ஏனைய பதிவுகள்