12069 – சைவ போதினி-மூன்றாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 9வது பதிப்பு, ஜனவரி 1975, 1வது பதிப்பு, 1967, 2வது பதிப்பு, 1968, 3வது பதிப்பு, 1969, 4வது பதிப்பு, 1970, 5வது பதிப்பு, 1971, 6வது பதிப்பு, 1971, 7வது பதிப்பு, 1972, 8வது பதிப்பு, 1973. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்).

(4), 54 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.10, அளவு: 18×12.5 சமீ.

விவேகானந்த சபையினர் தாங்கள் அகில இலங்கை அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்திவரும் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பயனுற வேண்டியும், இலங்கை அரசாங்க கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டது. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், கோவில்களுக்குச் செல்லுதல், சரியை வழிபாடு, கோயிலைச் சுத்தம் செய்தல், அப்பர் சுவாமிகள் தேவாரம், சிவபிரான் கல்லானைக்குக் கரும்பு தீற்றியது, சிவபிரான் பாலனாய் வந்து தொட்டிலிற் கிடந்தமை, சுந்தமூர்த்தி நாயனார், கந்தசுவாமியார் பிரமதேவருக்குப் படிப்பித்தது, சிவபெருமான் மண்சுமந்தமை, திருவாசகம், கௌசிக முனிவர், பட்டினத்துப் பிள்ளையார், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரன் கோவில், திருமந்திரப் பாடல், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், உலகநீதி, வினாத்தாள் 1972-1973 ஆகிய 19 பாடத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9608).

ஏனைய பதிவுகள்

12743 – தமிழ் இலக்கியம் வினா-விடை: ஆண்டு 10-11.

க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 8வது பதிப்பு, ஜுலை 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63B.A. தம்பி ஒழுங்கை). (44), 104 பக்கம், விலை:

No deposit Bonus

Content Incentive Blitz Do I get An initial time Pick Bonus To your Sweepslots Casitsu Gambling establishment: 29 Free Spins No-deposit On the elvis Frog

12941 – சுவாமி ஞானப்பிரகாசருக்கு நினைவு முத்திரை.

தமிழ் மொழி அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 4: தமிழ்மொழி அலுவல்கள் திணைக்களம், பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 244, காலி வீதி, 1வது பதிப்பு,மே 1981. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 36 பக்கம், புகைப்படங்கள், விலை: