விவேகானந்த சபை. கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது மீள்பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 8: அரசாங்க அச்சகத்திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி).
viii, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
சைவபோதினியின் மூலப்பதிப்பு, கொழும்பு விவேகானந்த சபையாரால் 1972, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டவை. தற்கால அறநெறிப் பாடசாலைகளின் மாணவர்களின் பயன்கருதி நான்காம் ஐந்தாம் வகுப்புகளும் இணைந்ததாக 54 பாடங்களுடன் அறநெறிப் பாடசாலைகளுக்கான இலவச வெளியீடு இல. 7ஆக இந்நூல் இணைந்த பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29062).