விவேகானந்த சபை. கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ், 271/5, செட்டியார் தெரு).
70 பக்கம், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
சைவபோதினியின் மூலப்பதிப்பு, கொழும்பு விவேகானந்த சபையாரால் எழுபது களில் வெளியிடப்பட்டவை. தற்கால அறநெறிப்பாடசாலைகளின் மாணவர்களின் பயன்கருதி இரண்டாம் மூன்றாம் வகுப்புகளும் இணைந்ததாக 35 பாடங்களுடன் அறநெறிப்பாடசாலைகளுக்கான இலவச வெளியீடு இல.9 ஆகிய இந்நூல் இணைந்த பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. சிவபெருமான் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தமை, உமாதேவியார் குழந்தைக்குப் பால் கொடுத்தமை, தேவாரம், கடலில் மிதந்த அப்பர், தேவாரம், நல்லூர்க் கந்தசுவாமி கோவில், கொன்றை வேந்தன், தேவாரம், பிட்டுவாணிச்சி அம்மையார், திருவாசகம், கோயிலுக்குச் செல்லுதல், கந்தசுவாமியாரும் ஒளவையாரும், சிவபெருமான் குண்டோதரனுக்கு அன்னம் இட்டருளியமை, வௌ;வேறு முறையான வழிபாடு, புராணம், பிள்ளையாரும் அகத்திய முனிவரும், கொன்றை வேந்தன், திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம், கோவில்களுக்குச் செல்லுதல், சரியை வழிபாடு, கோயிலைச் சுத்தம் செய்தல், அப்பர் சுவாமிகள் தேவாரம், சிவபிரான் கல்லானைக்குக் கரும்பு தீற்றியது, சிவபிரான் பாலனாய் வந்து தொட்டிலிற் கிடந்தமை, சுந்தரமூர்த்தி நாயனார், கந்தசுவாமியார் பிரமதேவருக்குப் படிப்பித்தது, சிவபெருமான் மண் சுமந்தமை, திருவாசகம், கௌசிக முனிவர், பட்டினத்துப் பிள்ளையார், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரன் கோவில், திருமந்திரப் பாடல், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், உலகநீதி ஆகிய பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29171).