12096 – சின்மயாக்னி.

பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா. கொழும்பு: பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா, ஆச்சாரியர், இலங்கை சின்மயா மிஷன், 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு: திருநீலகண்டன், லக்ஷ்மி பிரின்டர்ஸ்).

(8), 141 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

இலங்கை சின்மயா மிஷனின் துடிப்பமிக்க இளைஞர் அணியினரான ‘இலங்கை சின்மயா யுவகேந்திரா’ குருதேவர் சுவாமி சின்மயானந்தரின் ஜெயந்தியினை ‘சின்மயாஞ்சலி’ என்னும் கலை நிகழ்ச்சியினூடாக வருடாந்தம் கொண்டாடுவது வழக்கம். 2004ஆம் ஆண்டு திருக்கோணமலையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இமயத்திலிருந்து இதயங்கள் வரை (பத்மா சோமகாந்தன்), வெற்றியின் இரகசியம் (சுவாமி சின்மயானந்தர்), யோகம் கர்மஸு கௌஷலம் (சுவாமி சின்மயானந்தர்), ஸ்ரீ விநாயகர் (சுவாமி சின்மயானந்தர்), பரமேஸ்வரன் (சுவாமி தேஜோமயானந்தர்), கலைமகள்(பிரம்மச்சாரி ரமண சைத்தன்யா), அன்பை அள்ளிக் கொடு (சுவாமி சின்மயானந்தர்), காயத்ரி மந்திரம் (சுவாமி சின்மயானந்தர்), தியானம்-சில குறிப்புகள் (சுவாமி சின்மயானந்தர்), பெற்றோர்கள் கவனத்திற்கு (சுவாமி சின்மயானந்தர்), ஐயம் தெளிதல் (சுவாமி சின்மயானந்தர்), சின்மயா ளூசிறுகதைகள்.உழஅ, சின்மயா மிஷன்: ஓர் அறிமுகம், இலங்கை சின்மயா மிஷன், மலையகத்தில் மாருதி, சின்மய யுவகேந்திரா, சிந்தியுங்கள், உறுதி மொழி ஆகிய 16 தலைப்புகளில் இவிடயதானங்களை உள்ளடக்கி இம்மலர் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37234).

மேலும் பார்க்க:12013

ஏனைய பதிவுகள்

Wings of Gold Online Slots

Content Valorisierung ferner Zuverlässigkeit Beste Erzielbar golden games $ 1 Kaution Gratorama Ausschüttung Casinos 2024 » Diese Besten Book Of Wings Of Golden 150 Kostenlose

15523 கவி உள்ளம்.

மு.சோமசுந்தரம்பிள்ளை. மட்டக்களப்பு: மண்டூர்க் கவிஞர் மு.சோமசுந்தரம்பிள்ளை நூல்வெளியீட்டுக் குழு, மண்டூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1993. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). viii, 144 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×14