12097 – அளவெட்டி-நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் ஸ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத்தேர் மலர்.

விநாசித்தம்பி சிவகாந்தன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம், அளவெட்டி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

(6), 40 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப் படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

அளவெட்டி-நாகேஸ்வரம் ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானத்தினர் ஸ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேரோட்ட விழாவை 27.08.2005 அன்று கொண்டாடிய வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இதுவாகும். சித்திரத்தேர் வெள்ளோட்டம், ஸ்ரீ நாகவரத நாராயணர் திருப்பள்ளியெழுச்சி, பிரார்த்தனை, ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் பூர்வ வரலாறு தேர் விருத்தம், தேரின் மகிமையும் தத்துவச் சிறப்பும், ஸ்ரீ நாராயணப் பெருமான் தேரேறி வருகிறார் வாருங்கள் அவரழகைப் பாருங்கள், சிறுதேர் உருட்டியருளே, பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் அருளுரைகள், அறியவேண்டிய சில தகவல்கள், உரு வாக்கியவர் உள்ளத்திலிருந்து, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கீதை உபதேச மொழிகள், ஆகிய தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48865).

ஏனைய பதிவுகள்

Casimba Erfahrungen 2024 Prämie 1100, 125 Freispiele

Content Top-Zahlungsmethoden inoffizieller mitarbeiter Casimba Spielsaal: Slot black beauty Online Zusätzliche Spiele CrownPlay Kasino Casimba Kasino App Spielautomaten bilden entsprechend über und über untergeordnet an