12111 – நாயக்கர்சேனை ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் 1995.

ஏ.கே.திருச்செல்வம் (மலர் ஆசிரியர்). புத்தளம்: ஆலய பரிபாலன சபை, நாயக்கர்சேனை ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில், மாம்புரி, 1வது பதிப்பு, ஜுன் 1995. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்).

(164) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

16.6.1995இல் புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாயக்கர்சேனை ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவிலில் இடம்பெற்ற கும்பாபிஷேக வைபவத்தின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இம்மலரில் கோயிலும் குடமுழுக்கும் (சி.தில்லைநாதன்), நாயக்கர்சேனை ஸ்ரீ ஐயனார் சுவாமி கோவில் (கே.பசுபதிப்பிள்ளை), சித்திரைச் செவ்வாய் விழா-உடப்பு பிரதேசம்: ஒரு நாட்டுப்புறவியல் நோக்கு (கே.ஸ்ரீகந்தராசா), வடமேல் மாகாணத்தில் சக்தி வழிபாடு (எஸ்.நாகராஜன்), புத்தளம் மாவட்டத்தின் இந்துக் கோவில்களின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறுகளும் (பீ. தம்பித்துரை), வடமேல் மாகாணத்தின் இந்து சமய வளர்ச்சி (வ.கணேசன்), புத்தளம் மாவட்டத்தில் இந்துக்களின் திருமண, பூப்புனித நீராட்டு, அபரக் கிரியைகள் (வி.தயாளன்), ஐயனார் வழிபாட்டில் ஐயனார் மூர்த்தம் (இரா. வை.கனகரத்தினம்), புத்தளம் மாவட்ட சைவ சமய நிறுவனங்களும் அவற்றின் பணிகளும் (மு.கௌரிகாந்தன்), வடமேல் மாகாணத்தில் தோன்றிய சைவநூல் கள் (தில்லையடிச் செல்வன்), வடமேல் மாகாணத்தில் சைவசமயமும் கல்வியும் (ச.சுபதேவி) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24833).

ஏனைய பதிவுகள்

Virginia Reel

Blogs Reel Area Community Investigation To the Rat Isle, The only real Myself Dazzling Pollinators On the Spectacle Islandspectacular Pollinators To the Spectacle Area A