மலர் வெளியீட்டுக் குழு. புத்தளம்: ஆலய பரிபாலன சபை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், மன்னார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 13: வானதி பிரின்டர்ஸ், 171, ஸ்ரீகதிரேசன் வீதி).
(24), 76 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22 சமீ.
இம்மலரில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், ஆலய வரலாற்றுக் குறிப்புகள் (மு.கௌரிகாந்தன்), சிறுதெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணி: ஒரு நோக்கு (மா.நாகராஜா), ஊஞ்சற் பதிகம் (ச.சுப்பிரமணியம்), சித்திவிநாயகர் பதிகம் (கே. பசுபதிப்பிள்ளை), பாமாலை (சி.சிவமூர்த்தி), பாரதி கண்ட விநாயகர் (சி. தில்லைநாதன்), நீதிநூல்கள் கூறும் கல்விச் சிந்தனைகள் (சோ.சந்திரசேகரம்), வரத பண்டிதரின் இலக்கிய சமய நூல்கள் (துரை மனோகரன்), கல்வியின் இறுதி நோக்கம் (M.H.M.M.மஹ்ரூப் மரைக்கார்), விநாயக வழிபாடு (கே.நாகேந்திரன்), சாத்தானும் அரிஹரபுத்திரனும் (வ.மகேஸ்வரன்), சைவ சமயிகள் என்போர் யாவர் (குமாரசாமி சோமசுந்தரம்), குருநாகலையில் சைவம் (எஸ்.ரமேஸ்), சிலாபம் நகரில் கிறிஸ்தவர்களினதும் இந்துக்களினதும் பரஸ்பர ஒற்றுமைப் போக்கு (வயலெற் சந்திரசேகரம்), கட்டிடக் கலையில் ஒரு கண்ணோட்டம் (நவாலியூர் தி.சந்திரன்), ஆலயங்களும் அறநெறிப் பாடசாலைகளும் (பா. மதுரநாயகம்), விநாயக விரதங்கள் (அ.ந.இராஜகோபால்), ஆன்மீகம் ஒழுக்க விழுமியம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான கல்வி (மா.கருணாநிதி), ஆலய தரிசனம் (உருத்திரசிவம் துஷ்யந்தி), ஜோதிடக்கலை (த.பத்மநாதன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மலர் வெளியீட்டுக் குழுவில் எல். சிவநாதன்பிள்ளை, மு.கௌரிகாந்தன், அ.ந.இராஜகோபால், த.பத்மநாதன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39180).