12114 – மாவடிப்பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 2004.

மலர்க்குழு. மட்டக்களப்பு: மாவடிப் பிள்ளையார் ஆலயம், ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர், 1வது பதிப்பு, 2004. (ஏறாவூர் 4: ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பிரதான வீதி).

(12), 83 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்புமிக்க மாவடிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தையொட்டி வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில், 190 ஆண்டுகளுக்கு முன்னதான பழமைச் சின்னங்கள், ஆலயத்தின் தற்போதையை விமானச் சிற்பங்கள், ஆலயத்தின் பரிவாரத் தெய்வங்கள், மாவடிப் பிள்ளையார் ஆலயத்துடன் தொடர்புடைய ஏனைய ஆலயங்கள், மாவடிப் பிள்ளையார் ஆலயம் ஒரு வரலாற்று நோக்கு, இலங்கையில் இந்து மதத்தின் தொன்மையும் அது மறைக்கப்பட்ட தன்மையும், பரத நாட்டிய விற்பன்னர்கள் முன்னே காத்து நிற்கும் காலப்பணி சிந்திப்பார்களா? செய்வார்களா?, இந்து மதமும் நாமும், கிழக்கிலங்காபுரி மக்களின் வரலாறு ஒரு அறிமுகம், இந்துக்கோயில் கட்டடக்கலை, கணேசர் உற்பவம், தமிழர் பண்பாட்டில் கார்த்திகை விளக்கீடு ஒரு நோக்கு, கும்பாபிஷேக காலங்களில் ஓதத்தக்க திருப்பதிகங்கள், கீதை எடுத்துக்கூறும் வாழ்க்கை நெறி எந்த அளவுக்கு இந்த மக்களைப் பொறுத்தமட்டில் நடைமுறை வாழ்க்கை நெறியாக அமைகின்றது?, இந்து சமூகத்தில் பெண்கள்: இன்றும் அன்றும், சித்தர் பாடல்களில் இந்து சமயம் ஒரு நோக்கு, தமிழீழத்தில் பாரம்பரிய நாட்டுக்கூத்தின் வளர்ச்சிகள், ஆறுமுகத்தான் குடியிருப்பில் நாகதம்பிரான் வழிபாடு, இந்து வாழ்வியலின் தத்துவம் ஓர் அறிமுகம், உய்வினை உறுதியாகத் தரவல்ல சில சிந்தனைகள், பெரியதம்பிரான் வழிபாடு, தலங்கள், புனரமைப்பு ஆகிய தலைப்புகளிலான ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34537).

ஏனைய பதிவுகள்

Gold Diggers Slot Machine Game By Betsoft

Content Slots Móveis An arame Contemporâneo Para Android Unikrn Casino Giros Gratis Assentar-se encontrarmos jogos falsos entanto arruíi ação de avaliação de um casino, diminuímos