12117 – வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணைமலர்: புனராவர்த்தன கும்பாபிஷேக மலர்-2003.

ஹேமா ஷண்முகசர்மா (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: அருள்மிகு ஸ்ரீ வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் தேவஸ்தானம், வற்றாப்பளை, திருத்திய 2வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 1978. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xxii, 156 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.

இம்மலரின் 1978இல் வெளிவந்த முதற்பதிப்பிலிருந்து தேவையான அம்சங்களைத் தெரிந்தெடுத்தும் மேலதிகமாகவும் பல விடயங்களைப் புதிதாகச் சேர்த்தும் இம்மறுபதிப்பு வெளிவந்துள்ளது. ஈழத்திற் கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் (எம்.சற்குணம்), வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வரலாற்று மரபு (நா.சுப்பிரமணிய ஐயர்), வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அனர்த்தங்களும் அவற்றில் இருந்து மீண்டெழுதலும் (செ.சு.கிருஷ்ண மூர்த்தி), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் பொங்கல் (சி.பாலகிருஷ்ணன்), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் வயந்தன் (சீ.வினாசித்தம்பி), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவில் பொங்கலும் கதிர்காமம் தரை யாத்திரையும் (ந. மயில்வாகனம்), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் வரலாற்றுச் சிந்து, வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் அற்புதமும் அனுபவமும் (கா.கார்த்திகேய சர்மா), அம்பாள் உலாவரும் அழகுத் திருமஞ்சம் (க.ஜெயவீரசிங்கம்), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் மழைக் காவியம், பத்தஞானி பொங்கல்- வழிபாட்டு மரபுமுறைகள் (மயில் நல்லநாதபிள்ளை), அம்மானை, வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் வழிபாடு முள்ளியவளைத் தொடர்புகள் (முல்லைமணி), லட்சுமி கடாட்சம் (நா.நடராஜக் குருக்கள்), தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயம் (இ.வரதராசா), கண்ணகி வழிபாட்டில் தேசிய ஒருமைப்பாடு (சுப்பிரமணியம் திருஞானம்), வற்றாப்பளை ஞானமூர்த்திப் பிள்ளையார் ஆலயம் (க.ஜெயவிரசிங்கம்), வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பனிச்சையாடிய பாடற்சிந்து (சி.இராசசிங்கம்), மண்ணக மாதர்க்கு அணி (புவனா ஐயம்பிள்ளை), வற்றாப்பளைக் கண்ணகை அம்மனும் கோவலன் கண்ணகிக் கூத்தும் (அருணா செல்லத்துரை), சக்தி தத்துவம் (தங்கம்மா அப்பாக்குட்டி), வற்றாப்பளைக் கண்ணகை அம்மனின் வரலாற்று வணக்கப் பாக்கள் (ச.இராமலிங்கம்), வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் சிலம்புகூறல் வருகைதந்த வரலாறு, வேதங்கள் (கா.கைலாசநாதக் குருக்கள்), குமுழமுனை கொட்டுக் கிணற்றுப் பிள்ளையார் (சி.தெய்வேந்திரம்பிள்ளை), தெட்சிணாமூர்த்திப் பெருமானின் தனிப்பெருங் கருணை (பூரண தியாகராஜக் குருக்கள்), பழந்தமிழர் பண்பாடு பேணும் வன்னிநாடு (அநு.வை.நாகராஜன்), கண்ணன் தூது சென்றது ஏன் (ஸ்ரீ வத்ஸ ஜெயராம சர்மா), சமயம் சக விஞ்ஞானம் சமன் மனிதப் பண்பாடு (செ.சிவராசா), காப்பிய ஆசிரியர் வெற்றிவேற் புலவர் வரலாறு, வெற்றிவேற் புலவர் பாடியருளிய சிலம்புகூறல் காவியம் (முன்னுரை), சிலம்பு கூறல் காவியம், உபநிடதங்கள்-ஓர் அறிமுகம் (ஆத்மகணானந்தாஜி மகராஜ்), பாரோர் புகழ் வரும் பங்குனி உத்தரம் (ஹரிஹரசர்மா), சைவசித்தாந்தம் கூறும் கடவுட் கொள்கை (ஏ.என்.கிருஷ்ணவேணி) ஆகிய 35 படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34021).

ஏனைய பதிவுகள்

State Good morning To Black Jack

Content Visit this site here | Whenever Really does The newest Broker Must Hit-in Black-jack? Whenever Can i Struck Otherwise Substitute Blackjack? Blackjack Front Bets