12119 – அப்பரும் சுந்தரரும் அருளிய அற்புதத் திருப்பதிகங்கள்: பதிக விளக்கத்துடன்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: திருவருள் குலசிங்கம் அந்தியேட்டித்தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

x, 174 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.

இந்நூலில், சூலை நோய் கொடுத்துச் சைவத்துக்கு மீட்டமை, மதங்கொண்ட யானை வலம் வந்தமை, திருவையாற்றிற் கைலைக் காட்சி கண்டமை, கல் தெப்பமாகியமை, அரவுதீண்டி இறந்த மைந்தன் உயிர் பெற்றமை, தோன்றாத்துணை ஆயவர், திரிசூல இடப இலச்சினைப் பொறிப்பு, திருமறைக் காட்டில் வேதங்களாற் காப்பிடப்பட்ட கதவு திறந்தமை, வடதளியில் மறைந்த சிவாலயத்தைத் தோற்று வித்தமை, நீற்றறை குளிர்ந்த பொய்கைக்கரை ஆனமை, திருநின்ற செம்மை (திருவடித் தீட்சையுடனாதல்), மாயை வசப்படாது சிவபக்தரானமை, தாம் யார்க்கும் குடியல்லாதவனாகிச் சரணடைந்தமை, சிவானுபவ உணர்வு வழி ஆகிய 14 அற்புதங்களைக் கூறும் திருப்பதிகங்களும் அவற்றுக்கான பதிக விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூல், பன்னாலை, தெல்லிப்பழை திருவருள் குலசிங்கம் (15.4.1929-20.3.2004) அவர்களது அந்தியேட்டி வெளியீடாக 19.4.2004 அன்று வெளியிடப்பட்டது

ஏனைய பதிவுகள்

100 percent free Spins 2024

Posts Spin Local casino Luckyland Harbors Support service Pros and cons Out of 100 percent free Enjoy Casino games Must i Winnings Real money To

16125 அகத்திய மூலம் திருமந்திரம்.

மு.திருஷி. தெல்லிப்பழை: திருமதி அ.சீதாலட்சுமி, திருஷி ஈச்சுரம், பன்னாலை, 1வது பதிப்பு, 1970. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). (4), 40 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 18×12 சமீ. 225