12120 – அபிராமி அந்தாதி.

அபிராமிப்பட்டர் (மூலம்). கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில், 105, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, புரட்டாதி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834 அண்ணா சாலை).

56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×10.5 சமீ.

அபிராமி அந்தாதி அபிராமி பட்டரால் இயற்றப்பட்டது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும். அந்தாதி இலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அபிராமி அந்தாதி ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருக்கடவூர் என்பது. இது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புகளை உடையது. இத்தலத்தில் உள்ள அபிராமி அம்மை மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்த அபிராமிப் பட்டர் இயற்றிய நூலே அபிராமி அந்தாதி ஆகும். காப்புச் செய்யுள் ஒன்றும் நூற்பயன் செய்யுள் ஒன்றும் சேர இந்த அந்தாதி நூற்று இரண்டு செய்யுட்களை உடையது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13336).

ஏனைய பதிவுகள்

14152 நல்லைக்குமரன் மலர் 2009.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 172 + (48) பக்கம், புகைப்படங்கள்,