12121 – அருணகிரிநாத சுவாமிகளருளிய கந்தரநுபூதி.

இரா.சபாநாயகம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கதிர்காம யாத்திரீகர் தொண்டர் சபை, 1வது பதிப்பு, ஜுலை 1970. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம், 33, சென் செபஸ்தியன் மேடு).

(4), 73 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

கொழும்பு, கதிர்காம யாத்திரீகர் தொண்டர் சபையின் ஆதரவில் 1970களின் ஆரம்பத்தில் புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் சமய வகுப்புகளை நடத்தினார். அவ்வகுப்புகளில் அவர் கந்தரநுபூதிப் பாடல்களுக்கு வழங்கிய அரிய கருத்துக்கள் இங்கு சில குறிப்புகளுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் கி.பி. 1450இல் திருவண்ணாமலையில் ஆட்சிபுரிந்த பிரபு தேவராயர் காலத்தில் அங்கே வாழ்ந்தவர். தன்வாழ்நாளில் முருகன் புகழ் பாடிவந்தவர். அவர் பாடியருளிய திருப்புகழ் இன்றும் அழியாது முருக பக்தர்கள் மனத்தில் வாழ்கின்றன. அவர் பாடிய ஏராளமான திருப்புகழ் பாசுரங்களில் 1231 பாசுரங்களே இன்றளவில் பேணப்பட்டுவந்துள்ளன. இதைத்தவிர, கந்தர்அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, கந்தர் அநுபூதி ஆகிய நூல்களும் பாராயண நூல் களாகப் பயன்படுகின்றன. அவர் பாடிய கந்தரநுபூதி ஐம்பத்தொரு பாசுரங்கள் கொண்ட பாமாலையாகும். கந்தரநுபூதி பற்றிய செவிவழிக்கதையொன்றுண்டு. அருணகிரிநாதர் சமயத்தாண்டார் என்பவரோடு வாக்குவாதம் உண்டானபோது, தேவலோகத்தில் மலரும் பாரிசாத மலரைக் கொண்டுவருவதாகக் கூறித் தன்னுடலைக் கோபுரத்திற் கிடக்கவிட்டு ஒரு கிளி வடிவில் தேவலோகம் சென்றார் என்றும், திரும்பி வருமுன் அவரது உடலை அவர் இறந்துவிட்டதாகக் கூறித் தகனம் செய்துவிட்டனராம். அதன்பின் கிளிவடிவிலேயே முருகப்பெருமானின் திருவடிகளில் அமர்ந்து கந்தரநுபூதியைப் பாடியதாக இக்கர்ணபரம்பரைக் கதை கூறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3005).

ஏனைய பதிவுகள்

12316 – கல்வியின் அடிப்படைகள்.

வீ.கருணலிங்கம், செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: வீ.கருணலிங்கம், இல. 135, கன்னாதிட்டி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). vi, 224 பக்கம், விலை: ரூபா 400.,