வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 25, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம்).
viii, 28 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.
ஆசிரியரின் சிறிய தாயாரான அமரர் திருமதி தனலட்சுமி சிவசண்முகராஜா அவர்களின் நினைவாக, திருக்கோணமலை பத்ரகாளி அம்பாள் கோயில் இலட்சார்ச்சனை நிகழ்வினையொட்டி 29.01.2004 அன்று இந்நூல் வெளியிடப் பட்டது. பத்ரகாளி அம்பாள் பேரில் கவிஞர் வரதசுந்தரம் பாடியருளிய 108 தோத்திரங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003867).