12129 கந்தபுராணம்-யுத்தகாண்டம்: சூரபன்மன் வதைப்படலம் மூலமும் தௌி பொருள் விளக்க விரிவுரையும்.

ப்ரம்மஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), வே. சிதம்பரம்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீமத் வே. சிதம்பரம்பிள்ளை, மேலைப்புலோலி, 1வது பதிப்பு, ஆவணி 1938. (பருத்தித்துறை: மனோகர அச்சியந்திரசாலை).

(7), 388+4 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5X13 சமீ.

ப்ரம்மஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இயற்றிய கந்தபுராணம்-யுத்தகாண்டம், சூரபன்மன் வதைப்படலம்- மூலமும் யாழ்ப்பாணம் மேலைப்புலோலியைச் சேர்ந்த ஆசிரியர் ஸ்ரீமத் வே.சிதம்பரம்பிள்ளை அவர்கள் இயற்றிய தெளிபொருள் விளக்க விரிவுரையும் இணைந்த நூல் இதுவாகும். கந்தனது பெரும்புகழ் பேசும் நூல் கந்தபுராணமாகும். அப்புராணம் சித்தாந்தப் பொருள் நிறைந்த சைவ புராணமாகும். கந்தசஷ்டித் தினங்களாகிய ஆறு நாட்களிலும், சுப்பிரமணியப் பெருமான் சூரபன்மனாகிய ஆணவமலத்தின் வேகத்தைத் தணித்து அந்த ஆன்மாவுக்கு அருள்பாலித்தார். அந்த அற்புதமான கதை கந்தபுராணத்திலே சூரபன்மன் வதைப்படலத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17224).

ஏனைய பதிவுகள்

Tragamonedas Golden Knight

Content Jugando A Lo perfectamente Grande: Jerarquía Sobre Apuestas Y Norma Recompensa Tiradas Sin cargo De el Slot Da Vinci Diamonds Play Da Vinci Diamonds