12130 – கந்தர்வ கானங்கள்: மாவைக் கந்தன் பாமாலை.

மாவை பாரதி (இயற்பெயர்: பாகீரதி கணேசதுரை). மாவிட்டபுரம்: மாவை ஆதீனம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: தர்சன் அச்சகம், ஆனைக்கோட்டை).

xvi, 74 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமதி பாகீரதி கணேசதுரை அவர்கள் மாவைக் கந்தன் மீது கொண்ட பக்தி உணர்வின் வெளிப்பாடாக கவி மொழியிலே இக்கந்தர்வ கானங்கள் என்னும் பிரார்த்தனைப் பாடல்களை பக்தி இலக்கியச் சுவை குன்றாமல் இயற்றியிருக்கிறார். 2013 முதல் 2016 வரை ஆலய மகோற்சவ காலங்களில் இவற்றை எழுதி இணையத்தளங்களின் வழியாகப் பரவவிட்டிருந்தார். அப் பாடல்களே இங்கு தொகுக்கப்பட்டுத் தனி நூலில் அமைகின்றன.

ஏனைய பதிவுகள்

14301 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டின் உத்தேச அறிக்கை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1960. (கொழும்பு: லங்கா பிரஸ், பொரளை). 74 பக்கம், விலை: 25 சதம், அளவு: 22×13.5 சமீ. 1960 ஒக்டோபர்