12131 – கருணாகர கானாமுதம் 2014.

கருணாகரப் பிள்ளையார் கோயில். உரும்பிராய்: பரத்தைப்புலம் ஸ்ரீ கருணாகரப் பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2014. (மலேசியா: விசால் பிரின்ட் சேர்விஸ், கோலாலம்பூர்).

193 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சரித்திரப் புகழ் பெற்ற உரும்பிராய், பரத்தைப்புலம் ஸ்ரீ கருணாகரப் பிள்ளையாரின் புகழ்பேசும் பாடல்கள், விநாயகப் பெருமானுக்குரிய பாடல்கள், மற்றும் ஆலய விழாக்காலப் பாடல்களாகிய சில பாடல்களின் தொகுப்பாக அமைந்த பாமாலை நூல் இதுவாகும். சமரப்பணம், உள்ளடக்கம், கருணாகர கானாமுதம், ஆகியவற்றுடன் உரும்பிராய், பரத்தைப்புலம் ஸ்ரீ கருணாகரப் பிள்ளையார் கோவில் வரலாறு மகத்துவச் சுருக்கம் என்பன நூலின் ஆரம்பப் பக்கங்களில் இடம்பெறுகின்றன. தொடர்ந்து, கருணாகர விநாயகர் பேரில் தோத்திரப் பாமாலை, கருணாகர நான்மணிமாலை, கருணாகரப் பிள்ளையார் பாடல், கருணாகர விநாயகர் வேண்டல்-வாழ்த்துப்பா, திருவூஞ்சல், கோவில் பஜனைப்பாடல், திருப்பதிகம், வாழ்த்துப்பா, வளர்க கருணாகரன் புகழே, கருணாகரன் புகழ்மாலை, ஐங்கர வரதன் – கருணாகரப் பண்ணவன், கருணாகர கணேசா குடமுழுக்காடியருளே, மனங்குளிரவைத்த மகத்தான குடமுழுக்கு, வழிபாட்டுப் பாடல்கள்-பஞ்சபுராணம், விநாயகர் அகவல்-ஒளவையார், விநாயகர் அகவல்- நக்கீரர், விநாயகர் கவசம், விநாயகர் காரிய சித்தி மாலை, கணேசத் திருவருண்மாலை, விநாயகர் அநுபூதி, பிள்ளையார் கதை, திருவந்தாதி, திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், மஹோற்சவப் பாடல்கள் ஆகிய 30 தலைப்புகளில் இப்பாமாலை தொகுக்கப்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Texas Holdem Poker Erreichbar Über Echtgeld

Content Infolgedessen Brauchst Respons Der Vpn Für Angeschlossen Poker Entsprechend Erkenne Selbst Diesseitigen Guten Poker Provision? Online Dies Gute Lesen Ein Gegner Welche person pauschal

12536 – சூடாமணி நிகண்டு பதினொராவது பன்னிரண்டாவது (மூலமும் உரையும்).

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நல்லூர், 5வது பதிப்பு, 1925, முதலாவது பதிப்பு விபரமில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை). 82+42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: