சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: திருமதி குலசிங்கம் காமாட்சிப்பிள்ளை அந்தியேட்டித்தின வெளியீடு, ஆனைக்குட்டி வளவு, இணை வெளியீடு, ஐக்கிய இராச்சியம்: தி.குலசிங்கம், 2, மார்ல்பரோ பரேட், பெவர்லி ரோட், பார்மிங், மெய்ட்ஸ்டோன், கென்ட், 1வது பதிப்பு, மார்ச் 2004. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
viii, 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
இம்மலரில் ஞானப்பாலுண்டமை, பொற்றாளம் அருளியமை, முயலகன் நோய் தீர்த்தமை, சமணருடனான அனல் வாதத்தின்போது நெருப்பிலிடப்பட்டுப் பச்சையாகவே எடுக்கப்பட்டமை, ஆண்பனைகளைப் பெண் பனைகளாக்கியமை, படிக்காசு பெற்றமை, பனிக்குளிர் காரணமான நளிர்சுரம் போக்கியமை, யாழில் அடங்காப் பதிகம் காணல், வணிகன் விடந் தீர்ந்து எழுந்தமை, வேதாரணியத்தில் ஆலயக் கதவுகளை மூடும்படி பாடியது, என்புஞ் சாம்பருமாய பூம்பாவையை எழுப்பியமை, திருநீறிட்டுப் பாண்டியன் வெப்ப நோய் தீர்த்தமை, சிவனடியாரைக் கோள்கள் எதுவுஞ் செய்யமுடியாதென்றமை, சம்பந்தர் முத்துச் சிவிகை, குடை என்பன பெற்றமை, சம்பந்தர் பொன் முடிப்புப் பெற்றமை, ஆற்றுப் பெருக்கை இல்லாது செய்தமை, மந்திரங்கள் அனைத்திற்கும் ஸ்ரீ பஞ்சாக்கரம் மூலமெனல், சமணரை வாதில் வெல்லப் பாடியது (1), யார்க்கும் ஞான மெய்ந்நெறி நமச்சிவாயவே என்றது, மடத்திற்கு வைத்த தீயின் வெம்மை பாண்டியனை அணுகியமை, புனல்வாதத்தில் ஆற்றுநீரை எதிர்த்த பாடல், நெருப்பிற் திருப்பதிக ஏடு வேகாது வந்தமை, சமணரை வாதில் வெல்லப் பாடியது (2), திரு நல்லூர்ப் பெருமணத்திற் சோதியுட் கலந்தமை ஆகிய 24 அற்புதங்களைக் கூறும் திருப்பதிகங்களும் அவற்றுக்கான பதிக விளக்கங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.