செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxviii, 118 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0881- 27-7.
சைவசித்தாந்தம், இந்தியத் தத்துவ தரிசனங்கள், திருமந்திரம் ஆகிய மூன்று பாகங்களில் 47 தலைப்புகளின்கீழ் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சைவசித்தாந்தம் என்ற பாகத்தில் சைவசித்தாந்தம் கூறுவதென்ன, சைவ சித்தாந்தத்தில் மாயை, சிவாயநம என்ற மந்திரம், வள்ளுவரும் ஐஞ்செழுத்தும், முப்பொருள்களில் முதன்மையான பதி, அத்துமீறி நுழையும் வேற்று மதத்தினர், பதியின் பண்புகள், சைவ சமயத்தின் அடிப்படைகள்: ஒரு கண்ணோட்டம், விடை கிடைக்காத சிக்கல்கள் சில ஆகிய 9 தலைப்புகளில் சைவசித்தாந்தம் பற்றி ஆசிரியரின் கருத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரண்டாம் பாகமான இந்தியத் தத்துவ தரிசனங்களின் கீழ், இந்து மதம் இந்து சமயம் என்ற சொற்றொடர்கள், இந்திய தத்துவ ஞானப் பார்வைகள், ஏழு தரிசனங்கள், தத்துவ தரிசனங்களும் அவற்றின் கொள்கைகளும், சாங்கியம், யோக தரிசனம், வைசேடிகம், நியாயம் என்ற நியாய தரிசனம் ஆகிய 8 தலைப்புகளில் இந்தியத் தத்துவங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளது. திருமந்திரம் என்ற மூன்றாவது பாகத்தில் நுழைவாயில், மந்திரம் என்றால் என்ன? திருமந்திரம் தோத்திரமா சாத்திரமா? சேக்கிழாரும் திருமூலரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் திருமூலரும், நம்பியாண்டார் நம்பியும் திருமூலரும், திருமுறையைத் தேடி எடுத்தவர் யார்? அப்பரும் சம்பந்தரும் திருமூலரை மதிக்கவில்லையா? திருமந்திரம் என்ற பெயர்க் காரணம், திருமந்திரமும் திருக்குறளும், திருமந்திரம் மூலநூலா? மொழிபெயர்ப்பு நூலா? திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன? திருமந்திரம் என்பதா? திருமந்திர மாலை என்பதா? திருமந்திரமும் மெய்கண்ட சாத்திரங்களும், மெய்கண்ட சாத்திரச் சொல்லாட்சியும் திருமந்திரச் சொல்லாட்சியும், திருமந்திரப் பாடல்கள்-ஒரு பறவைப் பார்வை, திருமந்திரத்தில் இடைச்செருகல்கள் ஏற்பட்டிருக்குமா?, மீண்டும் மீண்டும் வந்துள்ள பாடல்கள், இறை இயலும் தத்துவ இயலும், திருமந்திரத்தின் உள்ளீடுபாயிரம் பகருகின்ற செய்தி, முதலாம் தந்திரம் மொழிகின்ற செய்தி, இரண்டாம் தந்திரம் இயம்புகின்ற செய்தி, மூன்றாம் தந்திரம் முழங்குகின்ற செய்தி, நான்காம் தந்திரம் நவிலுகின்ற செய்தி, ஐந்தாம் தந்திரம் அறைகின்ற செய்தி, ஆறாம் தந்திரம் அறிவிக்கின்ற செய்தி, ஏழாம் தந்திரம் எடுத்தோதும் செய்தி, எட்டாம் தந்திரம் எண்பிக்கின்ற செய்தி, ஒன்பதாம் தந்திரம் ஒலிக்கின்ற செய்தி, திருமந்திரம் நிறைவுரை ஆகிய 30 தலைப்புகளின் கீழ் திருமந்திரம் பற்றிய விளக்க மளிக்கப்பட்டுள்ளது. நூலாக்கத்துக்கு உதவிய நூல்கள், பயனுள்ள திருமந்திரப் பாடல்கள் சில, திருமந்திரமும் மெய்கண்ட சாத்திரமும்-ஓர் ஒப்பீடு, இரட்டித்து இடம்பெற்ற திருமந்திரப் பாடல்கள், குழூஉக்குறிச் சொற்களும் அவற்றைக் கொண்டுள்ள பாடல்களின் எண்களும், ஆசிரியரின் ஏனைய நூல்களின் பட்டியல் என்பன பின்னிணைப்புகளாக இடம்பெற்றுள்ளன.