சிவயோக சுவாமிகள் (மூலம்). கொழும்பு 7: சிவயோக சுவாமிகள் திருவடி நம்பிக்கைப் பொறுப்பு வெளியீடு, 15, வாலுகாராம வீதி, 2வது பதிப்பு, 2000, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு: கலர் டொட்ஸ் பிரின்டர்ஸ்).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13×10 சமீ.
யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருள்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, தமிழில் ‘நற்சிந்தனை’ எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் ‘The Words of Our Master’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பு சிவயோக சுவாமிகள் திருவடி நம்பிக்கைப் பொறுப்பு வெளியீடாக 2000 இல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28590).