ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆச்ரமம், இலங்கைக் கிளை, 40, ராமகிருஷ்ண வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு: யுனிவோக்கர்ஸ் பிரின்டிங் வேர்க்ஸ்).
(6), 130 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
இறைவனின் திருப்பெயரையும் புகழையும் பாடிப் பணிதல் பக்தி நெறியின் முக்கிய அம்சமாகும். பஜனையும் நாமசங்கீர்த்தனமும் மனமாசுக்களைப் போக்கி ஆனந்தத்தை அளிக்கவல்லன. இப்படிப் பக்தர்கள் ஒன்று சேர்ந்து பாடுவதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் இந்நூலை தொகுத்திருக்கின்றது. ஸ்ரீ கணேசா, ஸ்ரீ குரு, ஸ்ரீ சிவன், ஸ்ரீ தேவி, ஸ்ரீ முருகா, ஸ்ரீ ராமா, ஸ்ரீ கிருஷ்ணா, ஸ்ரீ ராமகிருஷ்ணா, ஸ்ரீ சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர், பிற பாடல்கள் ஆகிய 11 தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் முதற்குறிப்பகராதி இடம் பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36667).