12173 – முருகன் பாடல்: ஏழாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(16), பக்கம் 2405-2795, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2700., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. ஏழாம் பகுதியில் சுப்பிரமணியர் அகவல், செல்வச்சந்நிதி அகவல், மாவைக் கந்தர் அகவல், அலோர்ஸ்டார் தண்டபாணி இருபா இருபது அந்தாதி, இணுவை அந்தாதி, திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத்தந்தாதி, மயிலணி அந்தாதி, மாவை யமக அந்தாதி, முருகரநுபூதி, கதிர்காமத்து அம்மானை, கதிர்காம வேலர் திருவருட்பா, திருஅருட்பா, இரத்தினகிரிப் பால முருகன் அலங்காரம், ஆறுமாமுகன் அருட்பேராயிரம், அருணை ஆற்றுப்படை, சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை ஆகிய 16 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57672).

ஏனைய பதிவுகள்

Lists of Top VDR Providers

Using the correct VDR software allows businesses to have primary Datasite market rivals more efficient collaboration with third parties as well as customers. These tools

12019 – சிறுவர்களுடன்.

எஸ்.சிவதாஸ். வவுனியா: வவுனியா மனநலச் சங்கம், மனநலப் பிரிவு, மாவட்டப் பொது வைத்தியசாலை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 160 பக்கம், புகைப்படங்கள், விலை:

16965 ஒரு கிராமத்தின் பக்திநெறிப் பயணம்.

எஸ்.பாலா (இயற்பெயர்: எஸ்.பாலசிங்கம்). இணுவில்: கிராமத்துச் சூரியன் வெளியீட்டகம், தியேட்டர் ஒழுங்கை, இணுவில் கிழக்கு, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: Focus அச்சகம்). 170 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 24.5×17.5 சமீ.,